நித்தியானந்தாவுக்கு தடை இல்லை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report
20Shares

மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய சாமியார் நித்தியானந்தாவிற்கு தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா சட்டவிரோதமாக நுழைய முற்பட்டார் என தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி மகாதேவன் விசாரித்தார்.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த அவர், மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்தியானந்தாவிற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து நித்தியானந்தா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை இல்லை என தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வழக்கின் விசாரணை ஜூன் 18-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1744 total views