ஒவ்வொரு நொடியும்! சிவகார்த்திகேயன் உருக்கம்

Report
142Shares

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் பணிபுரிந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து கடந்த 2003 - ம் ஆண்டு மறைந்த சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் பற்றி அவருடன் பணியாற்றிய உதவியாளர் சௌந்தரராஜன் என்பவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் சிவகார்த்திகேயனின் தந்தை உயிரிழக்கும் கடைசி நிமிடத்தில் தான் மட்டுமே அவருடன் இருந்ததாகவும் , அந்த நினைவுகளை மறக்க முடியாது என்றும் அவரது இறந்த நாளில் தெரிவித்துள்ளார்.

அதற்கு ட்விட்டரில் பதிலளித்த சிவகார்த்திகேயன், என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது என்றும் , நான் அவருடன் பல வருடங்கள் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டத்தை கிடைக்கப்பெறாதவன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு நொடியும் தனது தந்தையின் நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

6814 total views