மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்த சக மாணவர்கள்: தொல்லை கொடுத்த மற்றொரு மாணவர் கைது

Report
29Shares

இந்தியாவில் சக மாணவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிக்கு, மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அகிரிபள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சக மாணவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டார்.

ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த பார்ட்டியில் மாணவர்கள் மது அருந்தினர். குறித்த மாணவி மது அருந்த மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், சக மாணவர்கள் வற்புறுத்தி குறித்த மாணவியை மது அருந்த வைத்துள்ளனர்.

அதன் பின்னர் போதையில் மயங்கிய குறித்த மாணவியை சக மாணவர்களான சிவா ரெட்டியும், கிருஷ்ண வம்சியும் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டனர்.

இந்நிலையில் பிரவீன் எனும் மற்றொரு சக மாணவர், குறித்த மாணவியை தொடர்பு கொண்டார். சிவா ரெட்டியும், கிருஷ்ண வம்சியும் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ தன்னிடம் உள்ளதாகவும், அதனை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் தனது ஆசைக்கு உடன்பட வேண்டும் என குறித்த மாணவியை அவர் மிரட்டியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி அதிர்ச்சியில் உறைந்தார். கடந்த இரண்டு மாதங்களாக பிரவீன் இவ்வாறு மாணவியை மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் நடவடிக்கைகளை கவனித்த அவரது பெற்றோர், அவரிடம் விசாரித்ததில் நடந்த உண்மைகளை அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பிரவீன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குறித்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், சிவா ரெட்டி மற்றும் கிருஷ்ண வம்சியை தேடி வருகின்றனர்.

1465 total views