மாலை மாற்றிய பின் 'பளார்' விட்ட மணமகள்.. அதிர்ச்சியில் உறைந்த மணமகன்! வைரல் வீடியோ

Report
138Shares

கோலாகலமாக நடைபெற்ற திருமண நிகழ்வின்போது தன்னை தோளில் தூக்கியவரை பளார் என மணமகள் கன்னத்தில் அறையும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும், திருமண நிகழ்வு மறக்கமுடியாத அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. ஏனென்றால் சிலருக்கு நினைத்தது போல் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும், ஒரு சிலருக்கு ஏதோ ஒரு காலத்தில் புண்ணியம் செய்ததைப்போல் அப்படியே எதிர்மறையாக அமைந்து விடும்.

உறவினர்கள் புடைசூழ, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திடும் அளவிற்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருமண நிகழ்ச்சியின்போதே, நமக்கான துணைவி அல்லது துணைவன் எப்படிப்பட்ட குணம் கொண்டவனாக இருப்பான் என்பதை ஓரளவு கணித்து விடலாம்.

அப்படி ஒரு திருமண நிகழ்வின்போது, மனைவியின் உண்மை முகத்தை வருங்கால கணவன் தெரிந்துகொண்ட காணொளி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில் மணமக்கள் இருவரும் மாலையை மாற்றுவதற்கு ஆயத்தமாகி நிற்கின்றனர். ஒருவர் மணமகனை தனது தோளில் தூக்கிக்கொண்டார். அதேபோன்று மணமகளையும் ஒருவர் வேகமாக தனது தோளில் தூக்கி கொள்கிறார்.

இதனையடுத்து இருவரும் மாலையை மாற்ற, உறவினர்கள் அனைவரும் சந்தோசத்தில் திளைக்கின்றனர். ஆனால் அந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கீழே இறக்கிவிட்ட வேகத்திற்கு, தன்னை தூக்கியவரின் கன்னத்தில் ஓங்கி பளார் என மணமகள் ஒரு அறை விடுகிறார். இதனால் கோபமடைந்த அந்த நபர், அங்கு அருகாமையில் நின்ற மற்றொரு பெண்ணின் கண்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, மணமகள் விட்ட அறையை பார்த்து, பால்குடிக்கும் பச்சிளங்குழந்தை போன்று சிரித்துக் கொண்டிருந்த மணமகன், அப்படியே சிறிது நேரம் பயத்தில் உறைந்துபோய் நிற்கிறான். இந்த காணொளியானது தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

5345 total views