ஹீரோவுக்கு அக்காவா? ஒழுங்கா ஓடிப்போயிடுங்க

Report
83Shares

ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம் அந்த மூன்றெழுத்து நடிகை.

மார்க்கெட் இல்லாத மூன்றெழுத்து நடிகை, சமீபத்தில் பிரச்னைக்கு உள்ளாகி வெளியான ஒரு படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்தார். அந்தப் படத்தில் இடம்பெறும் மொட்டை போடும் காட்சிக்காக, ஒரிஜினலாகவே மொட்டை போட்டுக் கொண்டார். ஆனால், எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிப் போனது.

படம் தோல்வியடைந்ததால், அவரையும் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதனால், வருத்தத்தில் இருந்தவரிடம் போய் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க கேட்டிருக்கிறார்கள். கடுப்பான அவர், ‘ஒழுங்கா ஓடிப்போயிடுங்க’ என்று அடித்து துரத்தாத குறையாக அனுப்பி வைத்தாராம்.

2392 total views