ஹிந்துவை சேர்ந்த நான்கு குழந்தைகளை தத்தெடுத்த முஸ்லிம் தாய்மார்கள்.. மதத்தை தகர்த்த மனித நேயம்....

Report
52Shares

ஜம்மு காஷ்மிர் மாநிலம் லீவ்டோரா என்ற கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்த பாபி கவுல்(40) என்பவர் வசித்து வந்தார். கணவனை இழந்த இவர் தனது 15, 16 வயதான பெண் குழந்தைகளும், 15, 7 வயதான ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். வறுமையில் வாடிய இவருக்கு அங்கு வசிக்கும் முஸ்லிம் மக்கள் வேலை வாங்கிக் கொடுத்தனர். உடல் நலக்குறைவால் சமீபத்தில் பாபி கவுல் இறந்தார். அவரது நான்கு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் இணைந்து இறந்த பாபி கவுலின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். தங்களிடமிருந்த அரிசி மற்றும் விளை பொருட்களை விற்று, அதில் கிடைத்த, 80 ஆயிரம் ரூபாயை, குழந்தைகளின் பெயர்களில் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர். குழந்தைகளின் பள்ளி படிப்பு, உணவு மற்றும் பராமரிப்பு செலவு முழுவதையும் கிராம மக்களே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மதவாதம் பற்றி சர்ச்சையாக பேசி, மக்களுக்குள் மதக் கலவரத்தை உருவாக்க நினைக்கும் ஒரு சிலருக்கு இந்நிகழ்ச்சி ஒரு பாடமாய் அமையும்.

2224 total views