அடுத்த படத்தை நானே இயக்கி நடிக்கிறேன் தனுஷ் அறிவிப்பு

Report
45Shares

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். மாரி-2 படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி இரண்டாவது பாதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பிலும் தனுஷ் ஒப்பந்தமாகி இருந்தார். அந்த படத்தை தனுஷே இயக்குவதாக சமீபத்தில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷே வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் அவரது அடுத்த படத்தை இயக்குகிறார். அதில் நாயகனாகவும் நடிக்கிறார்.

தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் 2018-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்று வரும் தனுஷ், கடந்த ஆண்டு ‘பா.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இந்த படத்தில் ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக இயக்கும் படத்தில் அவரே நாயகனாக நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

1932 total views