ரஜினியின் அரசியல் பிரவேசம்: அமிதாப் பச்சன் வாழ்த்து

Report
32Shares

அரசியலுக்கு வருவது உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை என்று கூறியிருந்தார்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பலரும் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக...’ என்று பதிவு செய்திருக்கிறார்.

1836 total views