ஹன்சிகாவை காதலிக்கிறேன்; மண்ணை சாதிக்

Report
136Shares

சமூக வலைதளங்களில் பலராலும் கிண்டலிக்கப்படும் மண்ணை சாதிக் தற்பொழுது ஹன்சிகாவை காதலிப்பதாக கூறியுள்ளார்.

தமிழக திரையுலகில் முன்னனி நாயகியான ஹன்சிகா மோத்வானி மும்பையில் பிறந்தவர் மாப்பிள்ளை என்கிற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், புலி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பவர்ஸ்டாரைப் போல் மண்ணைசாதிக் என்பவர் சமூகவளைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்படுபவர். ஏனென்றால் அவர் செய்யும் செயல் அப்படி, அவரை அவரே ஒரு மிகப்பெரிய ஹீரோ என்றும் தான் மிகப்பெரிய அழகன் என்றும் தன்னை காதலிப்பதாக பல பெண்கள் தொந்தரவு செய்வதாகவும் கூறிக்கொள்வார். தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ஹன்சிகாவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

4998 total views