ரஜினி கட்சியில் இணைந்தார் லைகா தலைவர் ராஜூ மகாலிங்கம்.

Report
109Shares

உலகளவில் செயல்படும் பிரபல நிறுவனம் லைகா. இந்த நிறுவனத்திற்கு பல தொழில்கள் உள்ளன. லைகா நிறுவனம், சினிமா துறையிலும் கால்பதித்து, தமிழில் கத்தி படம் மூலம் என்ட்ரியானது. தொடர்ந்து பல படங்களை விநியோகித்தும், தயாரித்தும் வருகிறது. தற்போது ஷங்கர் – ரஜினி – அக்ஷ்ய் கூட்டணில் 2.O எனும் பிரமாண்ட படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளது.

லைகா பிலிம்ஸின் இந்திய தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ராஜூ மகாலிங்கம். இவர், லைகாவில் தான் வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினியின் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “2.O படம் முதலே ரஜினியுடன் மிகவும் இணக்கமாக பழகி வருகிறேன். அவரின் எளிமை, நேர்மை, வெளிப்படைத்தன்மை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு அவருடைய கட்சியில் என்னை இணைய வைத்தது. ரஜினியின் கட்சியில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. உறுப்பினராக சேர்ந்து உள்ளேன்” என்று கூறியுள்ளார் ராஜூ மகாலிங்கம்.

3998 total views