தூத்துக்குடி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த சூரி

Report
32Shares

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூரியும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதுகுறித்து அவர் கூறியுள்ள செய்தியில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்முடைய தமிழர்களை இலங்கையில் சுட்டுக்கொன்றார்கள். அது பக்கத்து நாடு. ஆனால் இப்போது நம்முடைய நாட்டிற்குள்ளேயே அதுவும் நமக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலிஸே தமிழர்களை சுட்டுக்கொன்றிருப்பது கொடுமையாக உள்ளது.

அவர்கள் என்ன கேட்டார்கள், சுவாசிக்க நல்ல காற்றைத்தானே கேட்டார்கள். புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் வருகிறது. இதிலிருந்து எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற வேண்டும் என்று தானே கேட்டார்கள். அதற்குகூட உரிமையில்லையா.

தண்ணீர் வேண்டுமானால் அண்டை மாநிலத்தில் வாங்கிக் கொள்ளலாம். காற்றை எங்கே போய் வாங்குவது. அப்படி சுவாசிக்க நல்ல காற்றை கேட்டவர்களை சுட்டுக்கொன்று அவர்களின் மூச்சுக்காற்றையே நிறுத்தினால் என்ன நியாயம் என்று தெரிவித்துள்ளார்.

1368 total views