ரஜினியின் ‘காலா’ திரைப்படத்துக்கு கர்நாடகாவில் தடை: திரைப்பட வர்த்தக சபை முடிவு

Report
86Shares

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததால், அவரது ‘காலா’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட‌ திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இதற்கு அங்குள்ள தமிழ் அமைப்பினரும், ரஜினி ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘காலா’. வரும் ஜூன் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ரஜினியின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘காலா’. வரும் ஜூன் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ரஜினியின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இந்நிலையில், கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ், காவிரி விவகாரத்தில் தொடர்ந்து கன்னடர்களுக்கு எதிராக ரஜினி பேசி வருவதால் அவரது காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அண்மையில் அறிவித்தார். மேலும், இத்திரைப்படத்தை திரைப்பட விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந் தார்.

அதேபோல், கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட நவநிர்மாண் சேனா உட்பட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ரஜினியின் காலா திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

‘காலா’வுக்கு தடை

இந்நிலையில், காலா திரைப்பட விவகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கன்னட திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சாரா கோவிந்த் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட தடைவிதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால், கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், காலா திரைப்படத்துக்கு தடை விதித்திருப்பதை ஏற்க முடியாது; திரைப்படங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்றும் கர்நாடக தமிழ் அமைப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மன்னிப்பை ஏற்க மாட்டோம்

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் மன்னிப்புக் கோரினாலும் அதனை ஏற்க மாட்டோம் கன்னட திரைப்பட வர்த்தக சபை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், “ரஜினிகாந்த் முன்பு நடிகராக இருந்ததால் அவர் மன்னிப்பு கேட்டதும் சில திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி கர்நாடகாவில் திரையிட்டுள்ளோம். இப்போது ரஜினி, அரசியல்வாதியாக மாறியுள்ளதால் அவரது கருத்துக்களை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. எனவே இந்த விவகாரத்தில் ரஜினி மன்னிப்பு கேட்டாலும், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க முடியாது” என அவர்கள் கூறினர்.

திரையரங்குகளுக்கு நஷ்டம்

இதுகுறித்து காலா திரைப்படத்தின் கர்நாடக விநியோகஸ்தர் சௌரவ் கூறுகையில், “கன்னட திரைப்பட வர்த்தக சபையின் இந்த முடிவு துரதிஷ்டவசமானது. இந்த முடிவை மாற்றுமாறு கன்னட திரைப்பட்ட வர்த்தக சபையை வலியுறுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். ரஜினியின் கபாலி திரைப்படம் கர்நாடகாவில் ரூ.30 கோடி வசூலித்தது. காலா திரைப்படம் ரூ.50 கோடி வரை வசூலிக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், இந்த முடிவு திரையரங்க உரிமையாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

3392 total views