ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால்- மாணவி எடுத்த முடிவு!!

Report
268Shares

ஆசிரியர் ஒருவர் கொடுத்த பாலியல் தொல்லையால்; மாணவி ஒருவர் 8 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் குயிங்யாங் நகரை சேர்ந்த லீ என்கிற 19 வயதுடைய மாணவி அங்குள்ள பாடசாலையில் படித்து வந்தார்.

அவருக்கு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி அங்குள்ள ஒரு உயரமான கட்டடத்துக்குச் சென்று, 8 வது மாடியில் இருந்து குதித்து உயிர மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

அப்போது கீழே நின்று வேடிக்கை பார்த்த சிலர், மாணவியைத் தடுக்காமல் சீக்கிரம் கீழே விழுந்து சாவு எனக் கூறியுள்ளனர்.

இதனால் மேலும் மனமுடைந்த அந்த மாணவி கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புத் துறையினர் மாணவியின் உடலை மீட்டு சடலப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த ஆசிரியரையும், மாணவியை தற்கொலைக்கு தூண்டிய சிலரையும் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12259 total views