இரண்டவது திருமணம் செய்யும் தெலுங்கு நடிகை: கொலை மிரட்டல் விட்ட ரசிகர்கள்

Report
28Shares

உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரேணுதேசாய் இவர் சமீபத்தில் இரண்டவது திருமணம் செய்ய போவதாக தகவல் வந்துள்ளது.

இவர் பிரபுதேவா, பார்த்திபன் இணைந்து நடித்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக தமிழில் நடித்தவர். பின் தெலுங்கில் சிரஞ்சீவியின் சகோதரருமான பவன் கல்யாணும் ரேணுதேசாய் படங்களில் ஜோடியாக நடித்தபோதே காதலித்து வந்துள்ளனர். பின் இருவரும் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர் இருவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரேணுதேசாய், பவன கல்யாணும் கருத்து வேறுபாட்டால் 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த விட்டதாகவும் புதிய வாழ்க்கையை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரேணுதேசாய் கூறும் போது நான் தவறான இடங்களில் அன்பை தேடினேன் இப்போது உண்மையான காதலரை கண்டுபிடித்து விட்டேன் என்று அவரது இண்ஸ்டாகிராமில் தெரிவித்து இருந்தார்.

மேலும் ஒரு ஆணுடன் கைகோர்த்து இருப்பதுபோன்ற படத்தையும் வெளியிட்டார்.

இதை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் ரேணுதேசாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனார். பின் ரசிகர்கள் கூறுகையில் பவன் கல்யாண் எங்கள் கடவுள் அவரை காய்ப்படுத்தாதீர்கள் மீறி காயப்படுத்தினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் மற்றும் பல பெண்கள் தனியாக வாழ்கிறார்கள் உங்களுக்கு மட்டும் இன்னொரு திருமணம் எதற்கு என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இதை மீறியும் நீங்கள் திருமணம் செய்தால் உங்களை கொலை செய்ய கூட தயங்க மட்டோம் என கூறியுள்ளனர்.

1080 total views