விமான நிலையத்தில் நடிகையை ஆபாசமாக படமெடுத்த ஆசிரியர்! நடிகையின் அதிரடி செயல்...

Report
119Shares

விமானத்தில் தன்னை பல கோணங்களில் ஆபாசமாக படமெடுத்த ஆசிரியரை நடிகை ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

ஹைதராபாத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு விஜய் பிரகாஷ் என்ற பயணி வந்தார். இவர் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது.

விஜய் பிரகாஷ் பயணித்த விமானத்தில் சின்னத்திரை நடிகை ஒருவரும் பயணம் செய்துள்ளார். அப்போது விஜய் பிரகாஷ் அந்த நடிகையை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்காணித்த நடிகை, அவரது செல்போனிலிருந்து அவற்றை டெலிட் செய்யுமாறு விஜய் பிரகாஷிடம் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தாம் எந்தவிதமான புகைப்படங்களை எடுக்கவில்லை எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகை, அவரை சரமாரியாக நடிகை தாக்கியுள்ளார். ஆசிரியர் விஜய் பிரகாஷினி சட்டையை இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி பளார் விட்டார் அந்த நடிகை.

பின்னர் நடிகையுடன் சேர்ந்து வந்த துணை நடிகர் சையத் அன்வர் விமான நிலைய போலீசாரிடம் இதுதொடர்பாக புகார் செய்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அவரது செல்போனையும் வாங்கி ஆய்வு செய்தனர். அதில் அந்த ஆசிரியரின் செல்போனில் பல கோணத்தில் அவர் அந்த நடிகையை ஆபாசமாக போட்டோ எடுத்திருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கல்லூரி ஆசிரியரை போலீசார் கடுமையாக எச்சரித்தனர். மேலும் இதுபோன்று பெண்களிடம் அவர் ஏற்கனவே தவறாக நடந்துள்ளாரா என்றும் விசாரணை மேற்கொண்டனர்.

6304 total views