என் சொத்துகளை நானே நேரடியாக ஒப்படைக்கிறேன்: இப்படி சொன்னது யார்?வைரலாகும் அவரது புகைப்படம்

Report
20Shares

லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா லண்டனில் நடைபெற்ற ‘பார்முலா ஒன்’ கார் பந்தயத்துக்கு வந்துயிருந்தார். அப்போது பேட்டி அளித்த அவர் நானே என் சொத்துகளை ஒப்படைக்கிறேன் என கூறியிருந்தார்.

இந்திய வங்கிகளில் இருந்து ரூ. 9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் தொடக்கத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற ‘பார்முலா ஒன்’ கார் பந்தயத்துக்கு வந்த விஜய் மல்லையா நிருபர்களிடம் கூறியதாவது: நான் இங்கிலாந்து வாழ் இந்தியர் தான்.

இந்தியாவில் வசிப்பது இல்லை. அப்படியிருக்க நான் தப்பி ஓடியதாக எப்படி கூற முடியும்.

எங்கு நான் திரும்பி போக வேண்டும்.

இவை எல்லாம் வெறும் அரசியல்தான்.இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், என்னை திரும்ப அழைத்து வந்து, புனித சிலுவையில் தொங்கவிட்டு அதன்மூலம் ஓட்டுகளை பெறலாம் என்று அவர்கள் (மத்திய அரசு) நம்புவதாக நினைக்கிறேன். அதற்காக, என்னை இந்தியா கொண்டு செல்ல விரும்புகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள எனது சொத்துகளை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன்.

ஒருசில கார்கள், சிறிதளவு நகைகள் மட்டுமே எனக்கு சொந்தமாக உள்ளன. அவற்றை பறிமுதல் செய்வதற்காக நீங்கள் எனது வீட்டுக்கு வர வேண்டாம். நானே நேரடியாக அவற்றை ஒப்படைக்கிறேன்.

அதற்கான நேரமும், இடமும் சொன்னால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.

1028 total views