இரு பிரபலங்களை ஒரே தருணத்தில் சந்தித்த ஹர்பஜன்

Report
68Shares

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இரண்டு சூப்பர் ஸ்டார்களை ஒரே தருணத்தில் சந்தித்த நெகிழ்ச்சியை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபாரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேக்தா திருமணம் 10 ஆம் திகதி நடைபெற்றது. அதில், திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.

இத்திருமணத்தில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், "வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், இரெண்டு ஸ்டம்புகளுக்கு நடுவில் இருக்கலாம், அல்லது ஒரு பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளுக்கு நடுவிலும் இருக்கலாம், எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸு, எப்படி சாதிக்கிறோம்கிறது தான் மாஸ்" என பதிந்துள்ளார்.

2866 total views