நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல்.. விமர்சனங்களுக்கே குறிவைப்பது ஏன்?

Report
2Shares

தற்போது இந்திய நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்தை கண்டுள்ளாதா? என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் எவ்வளவு ஈடுபாடு காட்டியுள்ளது என்பது மக்கள் கேள்வி. ஆளும் கட்சியானாலும் சரி, எதிர்கட்சியானாலும் சரி நாட்டின் செயல்பாடுகளில் குறையை சரிசெய்வதே அவர்களின் கடமை.

சமயம், மொழி, இனம் ஆகியவற்றை அரசியலில் திணிப்பதுதான் இப்போதைய நிலையாகியுள்ளது. இப்படி தங்களின் நோக்கத்தோடு செயல்படாமல் மக்களுக்கு பணி செய்வதே அனைத்து அரசியல் பணியாளர்களுக்குள்ள கடமை.

ஒரு நாட்டின் வாழ்க்கை தரநிலைகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கடன்சுமையில் இருந்து வருங்கால தலைமுறையினரின் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வளர்ச்சி, மேம்பாடு, தலைமுறை இடையேயான சமநிலை போன்றவற்றின் அடிப்படையில் சுமார் 103 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் வளர்ந்த பொருளாதார நாடுகள் என்ற பிரிவில் 29 நாடுகள், வளரும் பொருளாதார நாடுகள் என்ற பிரிவில் 74 நாடுகள் என பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு வெளியிட்டப்பட்ட பட்டியலில் 79 வளரும் நாடுகளில் இந்தியாவுக்கு 60வது இடமும் பாகிஸ்தானுக்கு 52வது இடமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான மதிப்பீடுகள் குறைவாக கிடைத்தாலும் வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 10 இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டு வளர்ந்த நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

உலக தலைவர்கள் வெறும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மட்டும் கவனம் செலுத்தாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அந்நாட்டு மக்களின் வருமானம், வேலை வாய்ப்பு, வாழ்க்கை தரம், பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படவேண்டும். எனவே சமூகம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைய உலக தலைவர்கள் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதில் கவனம் செலுத்தாமல் விமர்சனங்களை நிறைகுறைகளை எடுத்துக்கொண்டு, மக்களுக்கான எண்ணங்களை சரி செய்தால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். இதை அனைத்து அரசியல் நிர்வாகமும் கருத்தில் கொண்டு செயலாற்ற மக்களின் குறலாக இருக்கட்டும்.

663 total views