மதுவின் கை காயம்: முதன்முறையாக வெளியான புகைப்படம்

Report
8Shares

மதுமிதாவின் கையில் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் டேனி.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தண்ணீர் பிரச்னை தொடர்பாக பேசியதால் மதுமிதாவுக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவர் தனது கையை அறுத்துக் கொண்டார்.

இதையடுத்து மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே இருந்தது.

மது மீது விஜய் டிவியும், விஜய் டிவி மீது மதுவும் மாற்றி மாற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தான் மதுமிதா முதல் முறை பிக்பாஸ் வீட்டில் உண்மையில் நடந்தது என்ன என்பதை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே மது தனது கையை அறுத்துக் கொண்டதால் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை, நடிகர் டேனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ஏன் மதுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதை போட்டோவை உற்று பார்த்தால் புரியும் என குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் மதுமிதா தனது கையை பயங்கரமாக தான் வெட்டியிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்தால் அதை நிச்சயம் உணர முடிகிறது.