5 லட்சத்திற்கு கணவனை வேறொரு பெண்ணிற்கு விற்று தாலியை கொடுத்த மனைவி.. காரணம் என்ன தெரியுமா?

Report
28Shares

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் திருமணமான வாலிபர் மனைவியை விட்டுவிட்டு பக்கத்து ஊரைச்சேர்ந்த மற்றொரு பெண்ணிடம் மனைவிக்கு தெரியாமல் வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் கள்ளத்தனமாக உறவு வைத்திருந்ததை அறிந்த மனைவி கையும் கலவுமாக பிடித்துள்ளார்.

வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதை கண்டித்தும், கெஞ்சியும் என்னுடன் வருமாறு கேட்டும் வராமல் இங்கேதான் இருப்பேன் என்று கணவர் கூறியுள்ளார். இதனால் இரு பெண்ணிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பெண்கள் பேசியதில் வாலிபரின் மனைவி பேரில் பெரிய அளவில் கடன் இருப்பதை சாதகமாக்கிக்கொண்ட அந்த பெண்மணி பேரம் பேசியுள்ளார். உன் கணவரை எனக்கு கொடுத்தால் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைப்பற்றி யோசித்த வாலிபரின் மனைவி 17 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதெல்லாம் முடியாது 5 லட்சம் தருகிறேன் என்று பேசியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட மனைவி கணவன் கட்டிய தாலியை 5 லட்சம் வாங்கி கொண்டு கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

கணவனை பணத்திற்காக விற்கும் அளவிற்கு காசு முக்கியமாக போய்விட்டதை எண்ணி அக்கப்பக்கத்தினர் அந்த பெண்ணை திட்டி வருகிறார்கள்.

1193 total views