கொரானா வேலையில் பட்டையை கிளப்பும் அமைச்சர் விஜயபாஸ்கரின் மகளா இது?.. வைரலாகும் வீடியோ..

Report
108Shares

சீனாவின் ஹுபெய் என்ற இடத்தில் ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு வாங்கி வரும் கொடிய ஜந்து கொரானா வைரஸ். கொரானா வைரஸால் சுமார் 21ஆயிரம் மக்கள் மடிந்த நிலையில் காட்டித்தீ போல பரவி வருகிறது. இதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் தீவிரமாக இந்நோய் பரவாமல் தடுக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரானா வைரஸால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை கூடி வருகிறது. இதனை தடுக்க இந்தியா முழுவதும் 144 தடை உத்திரவை அமல்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடும் பெரிய தடுப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரானா வைரஸின் ஓட்டுமொத்த தாக்கத்தினை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வருகிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும்பாளான மக்களை கவர்ந்து வருகிறார். மருத்துவராகவும், அமைச்சராகவும் பெரும் பொறுப்பில் சிறப்பாக கண்காணித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் தந்தையையே மிஞ்சும் அளவிற்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார்.. தந்தை தமிழ்நாட்டின் சுகாதாரத்திற்காக பொறுப்புணர்ச்சியுடம் செயல்பட்டு வரும் சூழலில் மகளும் கொரானா வைரஸின் விழிப்புணர்வுக்காக பாட்டு பாடி நடனமாடி வருகிறார்.

அமைச்சர் விஜய்பாஸ்கரின் மகளின் விழிப்புணர்வு வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.