கருவளையத்தை நீக்குவதாக பாம்பை முகத்தில் தேய்த்த நபர்; தெறித்து ஓடிய இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்

Report
49Shares

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் புதூரை சேர்ந்தவர் குமரேசன். இவர் ஒரு பாம்பாட்டி. திருபுவனையில் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? தன்னிடம் உள்ள விஷப்பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும்.

அவை இருந்த இடம் இல்லாமல் போய் விடும் என ஆசை வார்த்தை கூறி இந்த நூதன சிகிச்சை பெற அழைத்துள்ளார்.

மேலும், இதை நம்பி பலரும் இந்த சிகிச்சை பெற முன்வந்தனர். அந்த பாம்பாட்டி 100 ரூபாயை வாங்கிக் கொண்டு அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பை கையில் சுற்றி கருவளையத்தை நீக்குவதாக அவர்களது முகத்தில் தேய்த்தார்.

அப்போது பலர் பயந்து நடுங்கியபடியே இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். இளைஞர்கள் பலர் பயந்து ஓடியதையும் காண முடிந்தது.

இதனைத்தொடர்ந்து, அபாயகரமான இந்த பாம்பு சிகிச்சையுடன் நின்று விடாமல் மஞ்சள் கரு கலந்த மருந்தையும் கொடுத்து அதை முகத்தில் தேய்த்து வருமாறு பொதுமக்களுக்கு அந்த பாம்பாட்டி டிப்சும் கொடுத்ததுள்ளார். இதனால் இந்த சம்பவம் பொதுமக்களிடையே வைரலாகி சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.