112 வயதில் சாதனை படைத்த உலகின் வயதான நபர்!!

Report
12Shares

உலகின் வயதான நபர் என்ற பெருமையை ஜப்பானை சேர்ந்த மாஸாசூ என்ற 112 வயது முதியவர் பெற்றுள்ளார்.

1905-ம் ஆண்டு ஜூலை 25-ம் திகதி மாஸாசூ பிறந்துள்ளார், இவருக்கு 7 சகோதரர்கள், 1 சகோதரியும் உள்ளனர்.

இவர், உலகின் மிகவும் வயதான நபர் ஆவார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

ஸ்பெயினை சேர்ந்த பிரான்சிஸ்கோ என்பவர் இதற்கு முன்னர் உலகின் வயதான நபர் என்ற சாதனையை படைத்தார்.

பிரான்சிஸ்கோ தனது 113 வயதில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி இறந்துபோனார்.

இவர் இறந்துவிட்டதால், இந்த சாதனையை மாஸாசூ படைத்துள்ளார். 112 வயதானலும், இவரது செவிதிறன் நன்றாக இருக்கிறது.

இசை கேட்பது, செய்திதாள்களை படித்து அன்றாடம் உலகில் நடப்பவற்றை பற்றி தெரிந்துகொள்வதாக மாஸாசூ கூறியுள்ளார்.

891 total views