கோடை வெயில் பலன்கள் - சூரிய பகவான் எந்த ராசிய காப்பாத்துவார்? யாரை கைவிடுவார்?

Report
501Shares

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.மேஷம்

முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருநு்தால் தங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை பெறுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களாக இருநு்தால் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கல்வித் துறையில் இருக்கின்ற மாணவர்களாக இருந்தால் உங்களுக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும். இணைய தளங்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் செய்கின்றவர்களாக இருந்தால் தொழிலில் லாபம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.ரிஷபம்

வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட காரியங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நீங்கள் நினைத்த எண்ணங்களால் உங்களுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வர்த்தகங்கள் தொடர்புடைய முதலீடுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.மிதுனம்

வெளியூர் சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகள் உங்களுக்குக் கைகூடி வரும். முழு தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மிக வேகமாக முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்த செயல்களும் பல தடைகளுக்குப் பிறகு நிறைவேறும். உங்களுடன் பணி புரிகின்ற சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கான வசதி வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.கடகம்

உங்களுடைய மனதுக்குள் ஒருவிதமான பதற்றங்கள் உண்டாகும். உங்களுடைய வாகனப் பயணங்களில் செல்லுகின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். உங்களுடைய தொழிலில் உங்களுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வர திட்டமி தீட்டுவீர்கள். உங்களுடைய நீண்ட கால நண்பர்களைச் சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.சிம்மம்

உங்களுடைய பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய செலவுகளைக் குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உங்களுடைய நண்பர்களின் மூலமாக உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களினால் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். உங்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கிச் சேர்ப்பீர்கள். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்கன்னி

உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு நிற்கும். மூலிகைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். புதிதாக தொழில் செய்கின்றவர்கள் அது தொடர்பான ஆலோசனைகளைக் கிடைக்கும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட மனக் குழப்பங்கள் உங்களுக்கு நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.துலாம்

உங்களுடைய தொழிலில் புதிய முயற்சிகளில் இதுவரை இருந்து வந்த தடைகளும் தாமதங்களும் நீங்கும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் எதிர்பார்த்திருந்த பண வரவுகள் உங்களுக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதமாகும். உங்களுடைய உடன் பிறப்புகளால் கொஞ்சம் அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் வேலை செய்கின்ற பணிகளிலும் இடங்களிலும் மேன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்விருச்சிகம்

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உங்கள் காதுகளுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். உங்களுடைய பணியில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு இருந்த வீண் கவலைகள் தோன்றும். உங்களுடைய செயல்பாடுகளில் சிறிது கவனம் தேவை. தாய்வழி உறவினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.தனுசு

உங்களுக்கு வெளிவட்டாரங்களில் செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய குடும்பத்தில் உங்களுக்கு உண்டான சுப செய்திகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் நினைத்த செயல்களை நீங்கள் எதிர்பார்த்தபடி செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.மகரம்

உங்களுடைய சொந்த தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். நீங்கள் எதிர்பாராம உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் நிதானப் போக்கைக் கடைபிடிக்கவும். உங்களுடைய தடைபட்ட செயல்களை இனிமையாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.கும்பம்

உங்களுடைய பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்குத் தாய்வழியிலான உறவுகளின் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய பெற்றோர்களின் உடல் நிலை சரியாகும். புதிய வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நல்ல செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.மீனம்

உங்களுடைய உறவினர்களின் மூலம் உங்களுக்குச் சுப செய்திகள் வந்து சேரும். உங்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுடைய மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உங்களுடைய தொழில் வளங்கள் பெருக ஆரம்பிக்கும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். வணிகத் துறையில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்

13731 total views