தன் படங்களை போனில் மீண்டும் மீண்டும் காட்டுமாறு சைகை செய்த கொரில்லா!!

Report
87Shares

அமெரிக்காவின் கெண்டகி வனவிலங்குகள் பூங்காவில் வசிக்கிறது ஜெலானி கொரில்லா. பூங்காவுக்கு வந்த ஓர் இளைஞர் கொரில்லாவைப் புகைப்படங்களும் வீடியோவும் எடுத்தார். பிறகு கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த ஜெலானியிடம் ஒவ்வொரு புகைப்படத்தையும் காட்டினார். போனில் படங்களைப் பார்த்த ஜெலானி, மீண்டும் மீண்டும் படங்களைக் காட்டுமாறு சைகை செய்தது.

அமெரிக்காவின் கெண்டகி வனவிலங்குகள் பூங்காவில் வசிக்கிறது ஜெலானி கொரில்லா. பூங்காவுக்கு வந்த ஓர் இளைஞர் கொரில்லாவைப் புகைப்படங்களும் வீடியோவும் எடுத்தார்.

பிறகு கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த ஜெலானியிடம் ஒவ்வொரு புகைப்படத்தையும் காட்டினார்.

போனில் படங்களைப் பார்த்த ஜெலானி, மீண்டும் மீண்டும் படங்களைக் காட்டுமாறு சைகை செய்தது.ஒருகட்டத்தில் கண்ணாடியில் இளைஞர் சாய்ந்துகொள்ள, அவர் தோள் மீது உரசும் விதத்தில் கண்ணாடியில் கொரில்லாவும் சாய்ந்துகொண்டு படங்களைப் பார்த்து ரசித்தது.

ஒவ்வொரு படத்தையும் பார்த்த பிறகு, அடுத்த படத்துக்காக ஆவலுடன் காத்திருந்தது. மனிதர்களைப் போலவே பல விஷயங்களில் ஒத்திருக்கும் கொரில்லாவின் நடவடிக்கைகள் சுவாரசியப்படுத்துகின்றன.

4207 total views