பெற்றோர் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த குழந்தை! ஆச்சரிய சம்பவம்

Report
158Shares

சீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் பலியான தம்பதியின் கருமுட்டைகளைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்கை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2013-ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர்.

குழந்தைகள் இல்லாத அத்தம்பதியின் மூலம் பேரக்குழந்தையைப் பெற அவர்களது பெற்றோர் திட்டமிட்டனர்.

அதன்படி, அவர்களது உடலில் இருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை நான்ஜிங் மருத்துவமனையில் மைனஸ் 196 டிகிரியில் பாதுகாத்து வைக்கப்பட்டது.

சரியான வாடகைத்தாய் கிடைப்பதில் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டதால், நான்கு ஆண்டுகள் அவர்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக வாடகை தாய் கிடைத்தார்.

பின்னர் அந்த வாடகை தாயின் கருப்பையில், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கருமுட்டைகள் செலுத்தப்பட்டன.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

டிஎன்ஏ சோதனை மூலம் அக்குழந்தை இறந்து போன தம்பதியினுடையது என உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தையை இறந்து போன சீன தம்பதியின் பெற்றோர்கள் வளர்த்து வருகிறார்கள்.

6850 total views