ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்... கடைசியில் நடந்ததை பாருங்க

Report
38Shares

சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 'seaside girl Little Seven' என்ற தளத்தில் உணவு சாப்பிடுவது தெடர்பான பல வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வீடியோக்களை பலர் வாடிக்கையாக பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்டோபஸை உயிருடன் சாப்பிடுவது போன்ற வீடியோவை நேரலையில் பதிவு செய்ய முயற்சித்தார். ஆனால் 8 கால்களை கொண்ட அந்த ஆக்டோபஸ் அவரது முகத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டது. அந்த பிடியிலிருந்து விடுபட முடியாமல் அந்த பெண் அலறும் காட்சி 50 வினாடிகள் கொண்ட வீடியோவில் பதிவாகி உள்ளது.

நீண்ட போராட்டத்திற்குப் பின் ஆக்டோபஸின் இறுக்கமான பிடியிலிருந்து வெளிவந்த அந்தப் பெண்ணின் முகத்தில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. ஆக்டோபஸை உயிருடன் சாப்பிடலாம் என்று அந்தப் பெண் நினைக்க, அதையே அந்த ஆக்டோபஸூம் நினைத்திருக்கும் போல இருந்தது அந்த வீடியோ. என்ன நடந்தாலும் சரி, ஆக்டோபஸை உயிருடன் சாப்பிடும் வீடியோவை அடுத்து வெளியிடுவேன் என அந்த பெண் மனதைரியத்துடன் தெரிவித்துள்ளார்.

1821 total views