பதில் சொல்ல முடியாமல் தவித்த எச்.ராஜாவை வருத்தெடுத்த நெட்டிசன்கள்..

Report

கமல்ஹாசன் இந்துக்களை அவமதித்ததாக பா.ஜ.க வினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கண்டித்து வருகிறார்.

இதை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார். ”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய செடி மநீம என்றும், ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயல்” என கூறினார்.

மேலும் அந்த டிவிட்டிற்கு நெட்டிசன்கள் கேள்வி கேட்டும் கிண்டலடித்தும் வருகிறார்கள். ஒரு நபர் அவரிடம் ”நீங்க முஸ்லீம் குண்டர்னு சொல்லலாம் கமல் கோட்ஸே வ ஹிந்துனு சொன்ன கோவம் வருது??” என கேட்க,

”இந்த உலகத்தில் யாரையும் மதமாற்றம் செய்யாத நாகரீகமானவர்கள் இந்துக்கள். ஆனால் சமீபத்தில் இலங்கையில் 360 பேரைக் கொன்றவர்களை என்ன சொல்ல”

என்று சம்பந்தமே இல்லாமல் பதிலை அளித்ததை பார்த்த நெட்டிசன்கள் வருத்தெடுத்தும் வருகிறார்கள்.

1255 total views