"ஏன்டா முட்டாளுன்னு புருவ் பண்ணுறீங்க" ரஜினியை எதிர்ப்பவர்களுக்கு பதிலடிப் கொடுக்கும் குஷ்பு..

Report
15Shares

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகை நிகழ்ச்சியில் முரசொலி நாளிதழ் மற்றும் பெரியார் குறித்த கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இது பெரிய சர்ச்சையாக வெடித்திருந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரஜினிகாந்த் அளித்த பேட்டி குறித்து நடிகை குஷ்பு ‘ரஜினி கூறுவது சரியோ தவறோ அவர் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளார். பயம் இல்லாமல் தனது நிலையில் உறுதியாக இருக்கும் அவருக்கு எனது பாராட்டுகள் என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு "ரஜினி பேசுவது தவறு எனத் தெரிந்தும் அவருடன் நீங்கள் நடிப்பதால் அவருக்கு ஆதரவாக பேசுரீங்களே இது சரியா? " என சமூக பயன்பாட்டாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்குப் பதிலளித்த நடிகை குஷ்பு " அட லூசு பசங்களா.. ரஜினி சார் கூட 28 வருடத்திற்கு முன்னரே நடிச்சு முடிச்சிட்டேன். எனக்கு இது புதுசா இல்ல..ஏன்டா முட்டாளுன்னு உறுதி செய்றீங்க" எனப் பதிவிட்டுள்ளார்.


509 total views