கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகள்!!. கடுப்பான தொண்டர்கள்..

Report
4Shares

கொரானா லாக்டவுன் சமயத்தில் பல பிரபலங்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்பால் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், மருத்துவமனை எந்த பிரபலங்கள் சென்றாலும் வதந்திகளை பரப்புவதற்கு என்றே சிலர் சுற்றித்திரிகிறார்கள்.

தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டு வீட்டுக்கும் சென்றார். இதையடுத்தும், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதைத்தொடர்ந்து இவரது மனைவியும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டார் என்ற செய்தி பரபரப்பை கிளப்பியது. தற்போது விஜயகாந்தின் உடல்நிலை எப்படி உள்ளது என்பதை மியாட் மருத்துவமனை அறிக்கையாக வெளியிட்டது, கடந்த 9ம் தேதி டிஸ்சார்ஜ் செய்து விட்டதாக என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனால் முழுமையாக குணமடைந்து விஜயகாந்த் வீடு திரும்பி விட்டார் என்று ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் இதுபோன்ற சமயத்தில் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தேமுதிக கட்சியினர் சற்று பயத்தில் தான் உள்ளனர்.

இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்பி மன சங்கடத்தினை ஏற்படுத்த வேண்டாம் என்று ரசிகர்களும் தொண்டர்களும் கேட்டு கொண்டு வருகிறார்கள்.