பூனைக்காக கணவனை இழப்பதா? : துப்பாக்கிக்கு இரையான கணவன்

Report
85Shares

செல்­லப்­பி­ரா­ணி­யாக தாம் வளர்த்து வந்த பூனையை கணவர் அடித்­ததால் சின­ம­டைந்த மனைவி, தனது கண­வரை துப்­பாக்­கியால் சுட்டுக்கொன்ற விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்­தில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமையே இச் சம்­பவம் இடம்­பெற்றது.

மேரி ஹரிஸன் (47 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு பூனையை அடித்­த­தற்­காக தனது கண­வ­ரான டெக்ஸ்­டரை (47 வயது) துப்­பாக்­கியால் சுட்டுக் கொன்­றுள்ளார்.

தாம் வளர்த்து வந்த பூனையை தனது கணவர் அடித்­த­தா­கவும் அதனால் சின­ம­டைந்த தான் அவ­ருடன் விவா­தத்தில் ஈடு­பட்­ட­தா­கவும் விவாதம் உச்ச கட்­ட­ம­டைந்த தரு­ணத்தில் சினத்தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத தான் தனது கணவர் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­த­தா­கவும் மேரி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

துப்­பாக்கிச் சூட்­டை­ய­டுத்து டெக்ஸ்டர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டு சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலையில் உயி­ரி­ழந்­துள்ளார்.

2974 total views