இளம்பெண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டிய நடிகையின் செக்யூரிட்டி

Report
89Shares

தனது அத்தை மகளுடன் உல்லாசமாக இருந்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய நடிகை ஸ்ரீதேவியின் வீட்டு காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையில் செட்டில் ஆகிவிட்ட நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. படப்பிடிப்பு காரணமாக சென்னை வரும்போது அவர் அந்த வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல்குமார் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரின் அத்தை மகள் சென்னையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

அந்நிலையில், அந்த பெண்ணும், ராகுல்குமாரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே, அந்த பெண்ணை ராகுல்குமார், ஸ்ரீதேவியின் வீட்டிற்கு அழைத்து வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அதை அப்பெண்ணிற்கு தெரியாமல் வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுத்துள்ளார்.

அவர்களின் காதல் விவகாரம் அப்பெண்ணின் தாய்க்கு தெரியவர, அப்பெண்ணை அவர் பீகாருக்கு கூட்டி சென்றுவிட்டார். மேலும், அப்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல்குமார், தனது அத்தையிடம் அவரின் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வீடியோக்களை காட்டி மகளை திருமணம் செய்து கொடு அல்லது பணம் கொடு, இல்லையேல் அனைத்தையும் இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் அத்தை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, ராகுல்குமாரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

3848 total views