ஈழப்பெண் நடிகை லாஸ்லியா இலங்கை செல்ல ஏற்பட்ட சிக்கல்! தந்தை உடலை பார்க்கமுடியாத நிலை?

Report
164Shares

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் பிரபலமானவர் இலங்கை ஈழப்பெண் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிக்பாஸ் நிகழ்ச்சியீல் கலந்து கொண்டார். இந்நிலையில், கனடாவில் வாழ்ந்து வந்த பிக்பாஸ் புகழ் நடிகை லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று முன்தினம் தனது 52வது வயதில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் திருகோணமலைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும், இந்தியாவில் தற்போது இருக்கும் லொஸ்லியா மற்றும் அவரது நண்பர்களும் இலங்கையின் திருகோணமலைக்கு வரவ முயற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அவரது உடலை, தாய்நாடான இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வருகிறது. அதேபோன்று, லொஸ்லியா, தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடுகளில் இருந்து வருகின்றமையினால், இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் சூழலில், இலங்கைக்கு வருகை தருவதற்கான அனுமதியை கோரி லொஸ்லியா விண்ணப்பித்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் பூதவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சில சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரானா தொற்றுக்கு மத்தியில், பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி, அவரது உடலை தாயகத்துக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, லொஸ்லியாவின் தந்தை உயிரிழந்த தகவல் தொடர்பாக அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென நிகழ்ச்சிக்குள் மரியநேசன் வருகை தந்து, லொஸ்லியாவை அவேசமாக திட்டிய காட்சி, ரசிகர்கள் மத்தியில் இன்றும் நினைவில் இருக்கும் ஒரு சம்பவமாக காணப்படுகிறது. அந்த சம்பவமே, மரியநேசனை உலகறிய செய்தது.

இதேவேளை, சென்னையில் தற்போது வாழ்ந்து வரும் லொஸ்லியா, இலங்கைக்கு வருகை தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.