விசித்திரமான சாலை விதிமுறைகளை கொண்ட நாடுகள்

Report
71Shares

ஜப்பானில் நடந்து சென்று கொண்டிருப்பவர்கள் மீது வண்டியில் செல்வோர் தண்ணீரை வாரி இறைத்தால் அது அந்நாட்டு சட்டப்படி குற்றம்.

சீனாவில் பாதசாரிகளுக்காக வண்டியை நிறுத்தக் கூடாது. சீனாவில் சாலையை கடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல பெரும்பாலும் கூட்டம் சேருகிற வரை காத்திருந்து அதன் பின்னர் தான் சாலையை கடப்பார்களாம்.

தென்னாப்பிரிகாவில் சாலையில் செல்லும் போது மனிதர்களை விட விலங்குகள் ஏதேனும் சாலையில் செல்கிறதா என்பதையும் கவனித்துக் கொண்டே செல்ல வேண்டும். விலங்குகள் அடிக்கடி வரும் வழியென்றால் மெதுவாகத்தன செல்ல வேண்டும். மாறாக சாலையில் தான் எந்த விலங்கும் இல்லையே என்று வேகமாகச் சென்றாலும் அபராதம் விதிக்கப்படும்.

ஜெர்மனியில் வேகமாக செல்லக்கூடிய வாகனங்கள் செல்வதற்கென்றே ஒரு வழித்தடத்தை அமைத்திருக்கிறார்கள். அதற்கு ஆட்டோபஹ்ன் என்று பெயர். இந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் எல்லாம் ஹை ஸ்பீடில் செல்ல வேண்டும். மெதுவாக செல்லும் வாகனங்கள், அதிக சுமை ஏற்றியிருக்கும் வாகனங்கள் இதன் வழியாக செல்ல அனுமதிக்கப்படாது.இதன் வழியே செல்லும் போது நீங்கள் வண்டியை நிறுத்துவதோ அல்லது ஸ்லோ செய்வதோ கூடவே கூடாது. வண்டி கோளாறு ஏற்பட்டு நடுவில் நின்றாலும் அதற்கும் சேர்த்து அபராதம் விதிப்பார்களாம்.

தாய்லாந்தில் எந்தவாகனத்தில் போவதாக இருந்தாலும் அது இரு சக்கரமோ, நான்கு சக்கரமோ பயணிப்பவர்கள் எல்லோரும் உரிய ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ஆண், பெண் குழந்தைகள் என யாராக இருந்தாலும் சரி. முக்கியமாக மேலாடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

இத்தாலியில் இருக்கிற வரலாற்று புரதான இடங்களில் பயணிக்க சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான விதிகள் விதிக்கப்படும். இந்த நேரத்தில் இவ்வளவு வாகனங்கள் தான் செல்ல வேண்டும் என்று வரையறுத்து தான் வாகனங்களை அனுப்புகிறார்கள். அதற்காக முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியது அங்கு அவசியம்.

டென்மார்கில் நீங்கள் காரை எடுப்பதற்கு முன்னால் குனிந்து வீல்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஏனெனில் சக்கரத்துக்கு அடியில் விலங்குகளோ அல்லது குழந்தைகளோ சிக்கியிருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும் என்பது அங்கே கட்டாயமாக்கப்பட்ட ஓர் விதி.

ரஷ்யாவில் உங்களுடைய கார் சுத்தமாக இருக்க வேண்டும். கார் சுத்தமாக இல்லையென்றாலும் அதிகாரி உங்களிடம் அபராதம் விதிப்பார். குளிர் காலங்களில் லைசன்ஸ் கண்ணில் படும்படி வைக்க வேண்டும் என்பதற்காக இந்த விதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதுவும் உங்களது வீட்டிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கார் வாஷ் செய்யப்படுகிற இடத்தில் மட்டும் தான் காரை சுத்தம் செய்ய வேண்டுமாம்!

காஸ்டா ரைகாவில் வாகனம் ஓட்டும் போது பீர் குடிக்கலாம். ஆனால் அது அளவுக்கு மீறி போய்விடக்கூடாது. நடுவில் போலீசார் சோதனையிடும் போது உங்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.75 சதவீதத்திற்குள் இருக்கலாம். இதைத் தாண்டி ஒரு புள்ளி அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு நேராக சிறைத்தண்டனை தான்.

ஸ்காண்டிவியாவில் எந்த நேரத்தில் வண்டியை சாலையில் ஓட்டினாலும் வாகனத்தின் ஹெட் லைட் எரிய வேண்டும்.

ஸ்பெயின் நகரத்தில் இருக்கும் சில குடியிருப்பு பகுதிகளில் குறிப்பிட்ட வீட்டிற்கு அருகில் தான் நீங்கள் வாகனங்களை நிறுத்த முடியும். அங்கே பார்கிங் என்றோ நோ பார்கிங் என்றோ போர்டு எதுவும் இருக்காது. பின் வாகனம் நிறுத்துமிடத்தை எப்படி கண்டுபிடிப்பார்கள் தெரியுமா? அந்த வீட்டின் கதவு எண்ணை வைத்து தான். அந்த வீட்டின் எண் இரட்டைப்படை எண்ணாக இருந்தால் நீங்கள் வாகனங்களை நிறுத்தலாம். ஒற்றைப்படை எண் என்றால் நிறுத்தக்கூடாது.

மணிலாவில் ஏற்படுகிற கடுமையான ட்ராஃபிக்கினைத் தொடர்ந்து இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கலர் கோடிங் என்று இதனை அழைக்கிறார்கள். அதாவது இந்தந்த நிறம் கொண்ட வாகனம் இந்த சாலையில் குறிப்பிட்ட நேரத்தில் தான் பயணிக்க வேண்டும். அங்கு சட்டம் உள்ளது.

2877 total views