சேரனை பழிவாங்கிய லாஸ்லியா.. பிக்பாஸில் கலங்கவைக்கும் சம்பவம்

Report
381Shares

இயக்குனர் சேரனை பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா அப்பா என்று தான் அழைத்து வருகிறார். அவரும் இவரை மகள் என்றுதான் கூறுகிறார்.

மிகவும் நெருக்கமாக இருந்த அவர்கள் இடையில் தற்போது பெரிய விரிசல் விழுந்துள்ளது. கடந்த ஒருவாரமாக அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. கமலஹாசன் அவர்களுக்கு நடுவில் சமரசம் பேசிய நிலையில் நேற்று அவர்கள் இருவரும் பேசத்துவங்கினர்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நாமினேஷனில் லாஸ்லியா சேரனின் பெயரை தான் கூறுகிறார். அப்பா.. அப்பா.. என அழைத்துவிட்டு அவரது முதுகில் லாஸ்லியா குத்தியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அவள் என் பெயரை சொல்ல மாட்டாள் என சேரன் நம்பிக்கையோடு கூறுவதும் தற்போது வெளிவந்துள்ள டீசரில் காட்டப்பட்டுள்ளது. பின்னர் கவினிடம் பேசிக்கொண்டபோது சேரன் தன்னை இரண்டு முறை ஜெயிலுக்கு அனுப்பியது பற்றி தான் லாஸ்லியா கூறி அழுகிறார்.

13502 total views