ஹாலிவுட்டில் ஒரு சேவ் சக்தி: பாலியல் கொடுமைக்கு எதிராக ஒரு அமைப்பு

Report
8Shares

சமீபத்தில் ஹாலிவுட் இயக்குனர்கள் ஒருசிலர் நடிகைகளை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வெளிவந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகைகள் உள்பட பெண் திரைப்பட கலைஞர்களின் பாதுகாப்பிற்காக ஒரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது

சுமார் 300 நடிகைகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பு திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கவுள்ளது. இந்த அமைப்பில் நடிகைகள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பலர் உறுப்பினர்களாகி வருகின்றனர். இதேபோன்ற ஒரு அமைப்பான 'சேவ் சக்தி' என்ற அமைப்பை கோலிவுட் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட நடிகர், நடிகைகள் தாராளமாக நிதியுதவி அளித்து வருவதால் இதுவரை $13 மில்லியன் நன்கொடை குவிந்துள்ளதாகவும் இன்னும் ஒருசில நாட்களில் $15 மில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

1212 total views