என் தாய்க்காக: இது ராணாவின் சபதம்

Report
38Shares

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாய்க்காக புரோ மல்யுத்த லீக் போட்டியில் சுஷில் குமாரை வீழ்த்துவேன் என மல்யுத்த வீரர் பிரவீன் ராணா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கான, தகுதிச்சுற்று மல்யுத்த அரையிறுதிப் போட்டியில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமாரும், பிரவீன் ராணாவும் மோதினர்.

இப்போட்டியில், சுஷில் குமார் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, போட்டி முடிந்ததும் இருவரின் ரசிகர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, ராணாவின் சகோதரர் தாக்கப்பட்டார்.

தன் மீதும் தாக்குதல் நடந்ததாக ராணாவும் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், பிரவீன் ராணா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘என் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது புற்று நோயானது மூன்றாம் நிலையில் உள்ளது.

இந்நிலையில், நான் தாக்கப்பட்டதை அறிந்த எனது தாய், நோயின் வேதனையை விட நான் தாக்கப்பட்ட வேதனை தான் அதிகமாக உள்ளதாக கூறி மனம் வருந்தினார்.

இதனை மனதில் வைத்துக்கொண்டு வரும் புரோ மல்யுத்த லீக் தொடரில், களமிறங்கி சுஷில் குமாரை வீழ்த்துவேன் என தெரிவித்துள்ளார்.

2322 total views