“டிக் டாக்” கிற்கு அடிமையானதால் ஏற்பட்ட விபரீதம்

Report
41Shares

சமூக ஊடகமான டிக் டாக்கில் நீனாவை 2.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

இவரது நகைச்சுவைக் காணொளிகள் மிகவும் பிரபலமானவை. ஆனால், இதுபோன்று தொடர்ந்து காணொளிகள் தயாரிப்பதனால் மனநலம் பாதிக்கப்பட்ட நீனா தற்போது குணமடைந்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தொடர்ச்சியான காணொளிகள் காரணமாக உயிர்வாழவே வேண்டாம் என்ற நிலைக்கு நான் வந்தேன். இது போன்ற தீவிர யோசனை காரணமாக எனக்கு வைத்திய ஆலோசனை தேவைப்பட்டது.

சமூக ஊடகங்களில் எனக்கு அநேக நண்பர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் எனது காணொளிக்காக காத்திருப்பவர்கள் காத்திருப்பவர்கள். எனக்கு உதவி செய்கின்ற ஆலோசனை வழங்குகின்ற நண்பர்கள் இல்லை அவர்கள். அவ்வாறான நண்பர்கள் எனக்கு மிகவும் குறைவு.

இந் நிலையில் சமூக ஊடகங்களிலிருந்து என்னை விலக்கிக் கொண்டது பெரும் உதவியாக உள்ளது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

1507 total views