ஒரு கோடியே 78 லட்சம் டொலருக்கு, ஏலம் போன மணிக்கூடு.

Report
24Shares

காலஞ்சென்ற முன்னாள் பிரபல ஹொலிவுட் நடிகர் போல் நியுமனினால் (Paul Newman) உபயோகிக்கப்பட்ட கைக்கடிகாரம், நியூயோக் ஏலவிற்பனையில் பாரிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.

ஒரு கோடியே 78 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு, பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள போல் நியுமன், சர்வதேச ரீதியாக ஏராளமான ரசிகர்களை கொண்டவர் என்பதுடன், பல மோட்டார் கார் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்றார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு, தமது 83ஆம் வயதில் காலமானார்.

24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற லீ மான்ஸ் கார் ஓட்ட போட்டியிலும், பங்கு கொண்டு சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1698 total views