நடிகையை முகத்தில் குத்தி உதட்டை கிழித்த நடிகர்! பின்னர் நிகழ்ந்த விபரீதம்

Report
206Shares

நடிகர் ஜானி டெப் தன் முகத்தில் ஓங்கி குத்தி உதட்டை கிழித்ததாக நடிகை ஆம்பர் ஹெர்ட் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பும், அக்வாமேன் படம் புகழ் நடிகை ஆம்பர் ஹெர்டும் கடந்த 2015ம் ஆண்டு காதல் திருமணம் செய்து 2017ம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்தனர்.

அதன் பிறகு, விவாகரத்து பெற்ற அவர்களுக்கு இடையே இன்று வரை பிரச்சனையாக உள்ளது. ஆம்பர் ஹெர்டு தனது பெயரை கெடுப்பதாகக் கூறி ரூ. 347 கோடி நஷ்ட ஈடு கேட்டு டெப் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப் தன்னை தாக்கி காயப்படுத்தியதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

டெப் போதைப் பொருள் உட்கொண்டு தன்னை பலமுறை தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆம்பர் ஹெர்டுக்கு அவருடைய முன்னாள் காதலர் அளித்த ஓவியத்தை 2013ம் ஆண்டில் ஜானி டெப் தீ வைத்து எரித்தார். பின்னர், ஆம்பரை முகத்தில் குத்தியதில் அவவரின் உதடு கிழிந்து ரத்தம் வந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜானி டெப் விமானத்தில் குடித்துவிட்டு ஆம்பர் ஹெர்டு மீது பொருட்களை வீசினார். ஆம்பர் ஜேம்ஸ் பிரான்கோவுடன் சேர்ந்து நடித்த காட்சி பிடிக்காமல் அவர் அப்படி செய்தார்.

இதையடுத்து ஆம்பர் வேறு சீட்டில் உட்கார எழுந்து சென்றார். அப்பொழுது ஜானி அவரை பின்னால் உதைத்ததில் கீழே விழுந்தார்.

உடனே ஜானி தனது ஷூவை கழற்றி அவர் மீது வீசினார் என்று ஆம்பரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

6541 total views