பிறந்த அடுத்த நொடியே மாஸ்கை கழட்ட முயன்ற குழந்தை.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

Report
9Shares

பிறந்த குழந்தை ஒன்று மாஸ்கை கழற்றும் புகைப்படம் ஆனது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று, பிறந்ததுமே, அழுதுகொண்டே பிரசவ வார்டில் பணியிலிருந்த அவரின் மாஸ்க்கை கழட்டியெறிய முயன்றுள்ளது.

இதனையடுத்து ''நாம் எல்லோரும் மாஸ்க்கிற்கு விடை கொடுக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சிக்னல் கிடைத்துள்ளது'' என்ற கேப்ஷனுடன் அந்த படத்தைச் சமர் செயிப் பகிர்ந்துள்ளார்.

பலரையும் கவர்ந்துள்ள அந்த புகைப்படம் பலருக்கும் புதிய நம்பிக்கையை அளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.