தாராளம் காட்டச்சொன்ன இயக்குனர்!! ஒரு கோடி வாங்கி அசத்திய விஷால் பட மில்க் பியூட்டி நடிகை..
தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான படம் கத்தி சண்டை. அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் கதை ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.
இப்படத்தில் நடிகை தமன்னா முக்கிய ரோலில் நடித்தார். எளிமையான நடிப்பு குறைவான கவர்ச்சியை காட்டி வந்த தமன்னாவிடம், ஆரம்பத்தில் கத்தி சண்டை இயக்குனர் சுராஜ், அதிக கவர்ச்சியை காட்டச் சொல்லியுள்ளார்.
அதற்காக அவருக்கு 1 கோடி சம்பளமும் கொடுக்கப்பட்டதாம். கோடி சம்பளம் பெற வேண்டும் என்ற ஆசையில் தமன்னாவும் தாராளத்தை கொஞ்சம் அதிகமாக காட்டி நடித்தார். ஆனால் அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் தமன்னாவின் மார்க்கெட் தமிழில் குறைய ஆரம்பித்தது.
அதன்பின் அக்கடதேசம் மற்றும் பாலிவுட் பக்கம் சென்று அங்கும் கிளாமரில் எல்லைமீறி நடித்து வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெறுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை தமன்னா.