இதுதான் என்னுடைய நோக்கம்! தல அஜித்தை டார்க்கெட் செய்யும் 12 வயது இயக்குநர்!
director
thala ajith
ashikjinu
By Edward
கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவனான ஆஷிக் ஜினு என்பவர் குறுப்படத்தை இயக்கி சாதனைபடைத்து வருகிறார். ஜினு சேவியர் என்ற திரைக்கதை ஆசிரியரின் மகனாவார். சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டு 6 குறும்படங்களை இயக்கியும் தி கொலம்பியன் அக்காடமி என்ற படத்தினை இயக்கியும் இவிஏ என்ற இரண்டாம் படத்தினையும் இயக்கி அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை வெளியிட்டுள்ளார்.
சிறுவயது இயக்குநர் என்ற பெயரோடு பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் 12 வயது ஆஷிக் ஜினு.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியொன்றில் என்னுடைய டார்க்கெட் நடிகர் அஜித்தான். தல அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை என்ற நோக்கத்துடனும், ஒரு படம் எடுப்பதால் ஒரு சமுக அக்கரையோடு கருத்துக்களை கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.