சூப்பர் ஸ்டார் மீது ஏற்பட்ட காதல்!! பெற்றோருக்கு தெரியாமல் ரஜினிகாந்த் வீட்டுக்கு போன 15 வயது சிறுமி..
Rajinikanth
Gossip Today
Jailer
By Edward
சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு அவர்களின் நடிப்பின் மீது ஈர்ப்பால் தீவிர ரசிகர் ரசிகையாவது வழக்கம் தான்.
அப்படி ரஜினிகாந்த் மீது பல கோடி மக்கள் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பல ஆயிரம் ரசிகர்கள் ரஜினிகாந்தை காண வந்துள்ளனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய தீவிர ரசிகை ஒருவர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சேலத்தை சேர்ந்த 15 வயதுள்ள ஒரு சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் பள்ளி ஆசிரியரை பார்ப்பதாக கூறிவிட்டு சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார்.
15 சிறுமி ரஜினி விட்டில் இருப்பதை பார்த்த வீட்டுக்காவலாளி போலிசாருக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். உடனே இடத்திற்கு வந்த போலிசார் சிறுமியை மீட்டுள்ளனர்.