புஷ்பா, மாஸ்டர் எல்லாம் ஓரமா போங்க! எகிறவைத்த டாஸ்மாக் வசூல்..
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இன்று திருவள்ளுவர் தினமாக இருப்பதால் டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படுகிறது. மேலும் நாளை ஊரடங்கு அமலில் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படும்.
தொடர்ந்து 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதால் மதுப்பிரியர்கள் நேற்று டாஸ்மாக் கடையில் தஞ்சமடைந்து 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றுள்ளனர்.
இதனால் நேற்று 14 ஆம் தேதி மட்டும் டாஸ்மாக் வசூல் சுமார் ரூ.317 கோடி வசூல் வேட்டையை கொடுத்துள்ளது. 12ஆம் தேதி ரூ. 155.6 கோடியாகவும், 13ஆம் தேதி ரூ. 203.5 கோடியாகவும் வசூலித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 680கோடி அளவில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாம். தற்போது மாஸ்டர், அண்ணாத்த வசூலை மிஞ்சிடுச்சே என்று நெட்டிசன்கள் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.