ஜோடியாக செல்லவிருக்கும் நடிகர் நடிகை! பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய திருப்பமா?

priyabhavanishankar biggbosstamil5 harishkalyan
By Edward Oct 18, 2021 05:20 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் 5 சீசன். ஏற்கனவே நமீதா மாரிமுத்து சில காரணங்களால் வெளியேதையடுத்து போட்டியாளர்களிடையே கரும் போட்டி நிலவும் சண்டையும் உருவாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகை பிரியா பவானி சங்கரும் நடிகர் ஹரிஷ் கல்யாணும் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கார்த்திக் சுந்தரம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஓ மண பெண்ணே'. இந்து திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு திரைப்படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், மற்றும் வரிகள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் வரும் 22 ஆம் தேதி இந்த படமும் ரிலீசாக உள்ளது.

புரமோஷனுக்காக தான் தற்போது ப்ரியா பவானி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். இவருடன் ஹரீஷ் கல்யாணம் செல்ல வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களே இருக்கவிருக்கும் இருவரும் சில டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு கொடுக்கவுள்ளார்களாம்.