விஜய்யின் உச்சக்கட்ட ஆணவம்..20 நிமிட வீடியோ வெளியாகும்!! பிரபலம் சொன்ன தகவல்..
திரிஷாவும் விஜய்யும் திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரேமாதிரியான நிறத்தில் ஆடையணிந்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ள நிலையில் விஜய் - திரிஷா ஜோடியாக வந்தது தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

விஜய்யின் உச்சக்கட்ட ஆணவம்
இதுகுறித்து பத்திரிக்கையாளர் தேனி கண்ணன், விஜய்யின் உச்சக்கட்ட ஆணவம் தான் அவரின் இந்த செயல்பாடு. விஜய்யின் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு இது ஒரு சின்ன உதாரணம். திரிஷாவும் விஜய்யும் திருமணத்திற்கு ஜோடியாக சென்ற வீடியோவை பார்த்துவிட்டு தமிழகத்திலுள்ள பெண்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது சினிமாவில் வரும் கிசுகிசுவாக இருக்கும். நாங்கள் இதை நம்பாமல் இருந்தோம், ஆனால் திருமணத்திற்கு திரிஷாவை அழைத்து வருவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. மனைவி சங்கீதாவின் மனநிலையையும் குழந்தைகளின் மனநிலையையும் எவ்வளவு பாதிக்கும் என்பதை தெரியாமல் பொதுவெளியில் விஜய் இப்படி நடந்து கொண்டது பெண்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் உண்மை முகம் இன்னும் வெளியே வரும். அவரின் 20 நிமிட வீடியோ கூடிய விரைவில் வெளியே வந்து அவரின் முகத்திரை கிழியும். மேடையில் ஏறி கருத்து சொல்லும் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விஜய்யின் மிகப்பெரிய சொத்துக்கள் அனைத்தும் விஜய்யின் பெயரில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
கணவரின் பெயரில் இருக்கும் சொத்தில் இருந்துதான் ஜீவனாம்சத்தை பெற முடியும் என்பதால் அவரின் சொத்துக்கள் அனைத்தும் பெயர் மாற்றப்பட்டு வருகிறதாம். இது தெரிந்துதான் சங்கீதா நீதிமன்றத்தை தேடி இருக்கிறார். தன்னுடைய தாய்க்கு ஆதரவாக சஞ்சயும் களமிறங்கவுள்ளார். அரசியல் வாழ்க்கையை அவர் தான் குழித்தோண்டி புதைக்கப்போகிறார் என்று தெரிவித்துள்ளார் தேனி கண்ணன்.