சண்டைன்னா சட்ட கிழியத்தான் செய்யும்!! 2024ல் சண்டை போட்ட பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
2024ல் சண்டை போட்ட பிரபலங்கள்
சினிமா பிரபலங்கள் இடையே நடிப்பு ரீதியாக சண்டை வருகிறதோ இல்லையோ ஈகோ பிரச்சனையாலும் விவாகரத்து பிரச்சனையாலும் சண்டை வருவதுண்டு. அப்படி 2024ல் பிரபலங்கள் சந்தித்த பிரச்சனைகளும் விவாகரத்துக்களும் என்ன என்ன என்பதை பார்ப்போம்...
இந்த ஆண்டில் மிகப்பெரிய ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது நயன் தாரா - தனுஷின் பிரச்சனை. நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை கேட்டு 2 ஆண்டுகளாக தனுஷிடம் கேட்டும் அதை தர மறுத்தால் எழுந்த பிரச்சனை இன்றுவரை சரியாகாமல் இருக்கிறது. அதை மீறியும் நயன் தாரா தன்னுடைய ஆவணப்படத்தில் அந்த காட்சியை வைத்ததால் 10 கோடி கேட்டு தனுஷ் வழக்கு போட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பெரியளவில் பேசப்பட்ட விவகாரம் என்றால் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தான். திடீரென ஜெயம் ரவி விவாகரத்து கேட்க, அதற்கு ஆர்த்தி மறுக்க, இப்படியே சட்ட ரீதியாக விவாகரத்து கேட்க ஆரம்பித்தது வரை ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது.
2024ல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த விவாகரத்து செய்தி என்றால் அது ஏ ஆர் ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து தான். யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இருவரும் விவாகரத்து கேட்டிருப்பதும் அதற்கு சில காரணங்கள் சர்ச்சையானதும் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
விவாகரத்து ஒரு பக்கம் இருக்க சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே ஏற்பட்ட சண்டையும் பெரியளவில் பேசப்பட்டது.