TRP ரேஸில் டாப் இடங்களை பிடித்த சன் டிவி!! சிறகடிக்க ஆசைக்கு கிடைத்த இடம்...

Tamil TV Serials Siragadikka Aasai Singappenne Moondru Mudichu Ayyanar Thunai
By Edward Nov 13, 2025 02:30 PM GMT
Report

TRP ரேட்டிங்

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகமாக கவனம் பெற்று பார்க்கப்படும் சீரியல்களை வைத்து தான் டிஆர்பி ரேட்டிங் கிடைக்கும். அப்படி டிஆர்பி ரேட்டிங்கில் வாரவாரம் எந்த சீரியல் டாப் 10 இடத்தினை பிடிக்கும் என்ற லிஸ்ட் வெளியாகும். அதேபோல் சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைத்தால் அதே கதைக்களத்துடன் சீரியலை ஒளிப்பரப்பு செய்ய முயற்சி செய்வார். அப்படி 2025ன் 44வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்ன என்ன ரேட்டிங் பெற்று எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று பார்ப்போம்..

TRP ரேஸில் டாப் இடங்களை பிடித்த சன் டிவி!! சிறகடிக்க ஆசைக்கு கிடைத்த இடம்... | Unexpected Change Week 44 Top 10 Tamil Serial Trp

அதில், சன் டிவியின் ஹனுமன் சீரியல் 6.86 புள்ளிகளுஅன் 10வது இடத்திலும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 7.37 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், அய்யனார் துணை சீரியல் 8.29 புள்ளிகளுடன் 8வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

சன் டிவியின் அன்னம் சீரியல் 8.37 டிஆர்பி ரேட்டிங்குடன் 7வது இடத்திலும், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.41 புள்ளிகள் பெற்று 6வது இடத்திலும் இருக்கிறது.

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் 8.55 புள்ளிகளுடன் 5வது இடத்தையும், மருமகள் சீரியல் 8.71 புள்ளிகளுடன் 4 வது இடத்தினையும் பெற்றுள்ளது.

டாப் 3

சன் டிவியின் கயல் சீரியல் 9.41 டிஆர்பி புள்ளிகளுடன் 3வது இடத்தையும், சிங்கப்பெண்ணே சீரியல் 9.78 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

44வது வாரத்தின் TRP ரேட்டிங்கின் படி மூன்று முடிச்சு சீரியல் 9.69 புள்ளிகள் பெற்று முதல் இடத்தினை பிடித்திருக்கிறது.