கோடிக்கணக்கில் வருமானம்.. யூடியூபர்களில் யார் டாப் தெரியுமா? VJ சித்து, இஃர்பான்லா இல்லங்க...
யூடியூபர்களில் யார் டாப்
இந்தியாவில் சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி அதன்மூலம் வருமானம் சேர்த்து வருபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அதில் தமிழில் பல யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெறுவார்கள்.
அப்படி யூடியூப் Vlog,டெக் மூலம் 2024ல் முழுநேர வேலையாக பார்த்து சாம்பாதித்தவர்களில் யார் அதிக வருமானம் பெறுகிறார்கள் மற்றும் சொத்து எவ்வளவு என்ற லிஸ்ட்டை இங்கு பார்ப்போம்.
கடந்த 2015ல் யூடியூப்பில் சேனலை ஆரம்பித்தவர் கௌரவ் சவுத்ரி 10 மில்லியனுக்கும் மேல் சப்ஸ்கிரைபரை கொண்ட முதல் டெக் யூடியூபராக திகழ்ந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 356 கோடி என்று மதிப்பிடத்தக்கது.
இவரை தொடர்ந்து இசைக்கலைஞர் புவன் பால் பிபி கி வினேஷ் என்ற சேனல் மூலம் 26 சப்ஸ்கிரைபர் பெற்றுள்ளார். இவரின் சொத்துமதிப்பு 122 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
2012ல் யூடியூப் சேனல் ஆரம்பித்து 24 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ள அமித் பதனா ரூ. 80 கோடி சொத்து மதிப்பினை வைத்திருக்கிறாராம்.
நகைச்சுவை மற்றும் கேமிங் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து யூடியூப்களில் வீடியோவை பதிவிட்டு வருபவர் அஜய் நகர். CarryMinati என்ற சேனல் மூலம் பிரபலமாகி 43 சப்ஸ்கிரைபர் கொண்ட அஜய் நகரின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடியாக மதிப்பிடபட்டுள்ளது.
இவர்களை தாண்டி தமிழில், பலர் யூடியூப் மூலம் சம்பாதித்து வருவதை மறைமுகமாகவும் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.